பில் கேட்ஸின் திறந்த மனம்
உலக பணக்காரர், மென்பொருள் உலகின் சக்கரவர்த்தி பில் கேட்ஸிடம் ஒருவர் கேட்கிறார்.
"உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா ?" என்று உலக பணக்காரர், கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் பில் கேட்ஸிடம் அவரின் நண்பர் ஒருவர் கேட்கிறார்.
அதற்கு பில் கேட்ஸ் சொல்கிறார்..
“ஆம். ஒருவர் இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு இருந்த சமயம். நியூயார்க் நகர விமான நிலையத்தில் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை. அதனால், வாங்காமல் விட்டுவிட்டேன்.
அப்போது, ஒரு கருப்பினச் சிறுவன், என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான்.
என்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை , இலவசமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றான்.
என்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை , இலவசமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றான்.
மூன்று மாதங்கள் கழித்து, மறுபடியும் அ்ங்கே செல்ல வேண்டியதாகிவிட்டது. அன்றும் என்னிடம் சில்லறைக்காசுகள் இல்லை. அதே சிறுவன் நாளிதழை இலவசமாகக் கொடுத்தான்.
ஆனால், நான் வாங்க மறுத்தேன். அவன், தனக்கு
கிடைத்த அன்றைய லாபத்திலிருந்து தருவதாகக் கூறி, என்னிடம் தந்தான்.
கிடைத்த அன்றைய லாபத்திலிருந்து தருவதாகக் கூறி, என்னிடம் தந்தான்.
19 வருடங்கள் கழிந்தன.
நான் பணக்காரன் ஆனேன். ஒருநாள் அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்குள் உண்டானது.
நீண்ட நாட்களுக்குப்பின் ஒருவழியாக அவனைக் கண்டுபிடித்தேன்.
நான் பணக்காரன் ஆனேன். ஒருநாள் அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்குள் உண்டானது.
நீண்ட நாட்களுக்குப்பின் ஒருவழியாக அவனைக் கண்டுபிடித்தேன்.
அவனிடம் கேட்டேன். "என்னைத் தெரிகிறதா ?" என்று. அவனும், "தெரிகிறது. நீங்கள் புகழ் வாய்ந்த பில் கேட்ஸ்" என்றான்.
பல வருடங்களுக்கு முன்னால், நீ எனக்கு இரண்டு முறை இலவசமாக நாளிதழ்களை வழங்கியதை நான் மறக்கவில்லை. அதற்காக , நீ என்னவெல்லாம் விடும்புகிறாயோ, அவற்றை நன்றிப்பெருக்கோடு உனக்குத்தர விரும்புகிறேன் என்றேன்.
"அது உங்களால் ஒருபோதும் முடியாது." என்றான் அந்தக் கருப்பு இளைஞன்....
"ஏன் ? " என்றேன் நான்.
அந்த இளைஞன், "நான் ஏழையாய் இருந்த போது , உங்களுக்குக் கொடுத்தேன். ஆனால், நீங்கள் பணக்காரர் ஆன பின்புதானே எனக்குக் கொடுக்க வருகிறீ்ர்கள். இது எப்படி சரியாகும்? என்றான்.
இப்போதும், எப்போதும் அந்தக் கருப்பு இளைஞன் தான் என்னை விடப் பணக்காரன் என்றே நான் சொல்வேன்.” என்றார் பில் கேட்ஸ்.
மேலும், அந்த இளைஞன் மூலமாக,
உதவ வேண்டும் என்ற குணத்திற்கு கால, நேரம் அல்லது ஏழை, பணக்காரன் என்பதும் கிடையாது என்கிற அற்புதமான எண்ணத்தை அனுபவ பூர்வமாக நான் பெற்றுக்கொண்டேன். வறுமையிலும் பரோபகாரமே இறைத்தன்மைக்கு இணையானது என்கிறார் பில் கேட்ஸ்.😍🙏

படித்ததை வடித்த மகிழ்வில்...