>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

புதிய தேர்வு மையம் : பள்ளிகளில் விபரம் சேகரிப்பு


தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான மையங்கள் அமைப்பதற்காக, அதுகுறித்த விபரங்களை அனுப்பி வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 தேர்வும்பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுஉள்ளது. கடந்த ஆண்டு வரை, குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை உள்ள பள்ளிகள் மட்டுமே தேர்வு மையங்களாக இருந்தன. குறைவான எண்ணிக்கை உள்ள மாணவர்கள், அருகில் உள்ள வேறு பள்ளி தேர்வு மையத்துடன் இணைக்கப்படுவது வழக்கம்.'நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்' என, கல்வியமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துஇருந்தார். தற்போது ஒவ்வொரு பள்ளியிலும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, தேர்வுமையம் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அனுப்பி வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மாணவர்களின் தேர்வு நேர அலைக்கழிப்பை குறைக்கும் வாய்ப்பு உருவாகிஉள்ளது.