JACTTO - GEO : உயர்நீதிமன்ற கேள்விகளும் - அரசு பள்ளி ஆசிரியர்களின் விளக்கமும்....
அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் தமிழகமெங்கும் கைது....முடங்கி கிடக்கிறது அரசுப்பணிகள்*
முதல் கேள்வி : வெறும் 2% இருக்கும் அரசு ஊழியர் 1% ஆசிரியர்களுக்கு மொத்த மாநில வருவாயில் 40% வழங்கப்படுகிறது இது போதாதா ?
பதில் : 3% அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 97% சதவீத மக்களுக்கான பணிகளை செய்கின்றனர்... இந்த 3% பணியாளர்கள் செயல்பாடுதன் மொத்த அரசும் , ஆட்சியும்... இவர்கள் இல்லையென்றால் ஏதுமில்லை...
கடுமையான விலைவாசி உயர்வு அதே பழைய ஊதியத்தை பெற இயலுமா ?
இன்று ஒரு சாதாரண பணியாளின் ஒரு நாள் சம்பளம் ரூ450 முதல் ரூ 800 வரை ஆனால் கடைநிலை அரசு ஊழியன் வாங்கும் ஒரு நாள் ஊதியம் ரூ 250 , கல்வித் தகுதிகேற்ப தனியார் தரும் மாத வருமானம் லட்சங்கள் கூட ஆனால் அரசோ தருவது சில ஆயிரங்கள்...
👉🏼2006ல் அமல்படுத்தப்பட்ட பழைய ஊதியம் 2017 ல் மாற்றியமைக்கப்பட வேண்டுமா? இல்லையா?
👉🏼அப்படியே அள்ளி கொடுத்துவிட்டாலும் அந்த பணத்தை அரசு ஊழியர் ஆசிரியர்கள் மென்று தின்று விடப் போவதில்லை... அவர்கள் வாங்கும் பொருள்கள், செலுத்தும் வரி , கட்டணம் என அந்த பணம் இங்கே தான் முதலீடு செய்யப்படும்..
👉🏼சரி அரசுக்கு 4லட்சம் கோடி கடன், இது யாரால் வந்தது ?
3% ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தாலா ?
அரசின் தவறான தொழில் மேம்பாடு , தொழில் வளர்ச்சி முதலீடு இல்லை ... சரியான தொழில் வளர்ச்சி முதலீடு நிதி மேலாண்மை இருந்தால் இந்நேரம் 3% ஊழியர்களுக்கு தரக்கூடிய ஊதியம் மொத்த வருமானத்தில் 20% குறைவாகத் தானே இருந்திருக்கும்...
போதிய வருமானத்தை பெருக்காதது யார் தவறு ?
அதற்காக 97% மக்களுக்காக பணியாற்றும் 3% ஊழியர்கள் கடனோடும் பசியோடும் இருக்க சொல்வீர்களா ?
👉🏼5G வரப்போகுது சார் இன்னும் லேன்ட்லைன் போன்லேயே இருந்தா எப்படி ...
👉🏼1.CPS ரத்து
2.ஊதியக் குழு அமல்
3.20%இடைக்கால நிவாரணம் - உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்தி தமிழகமெங்கும் லட்சகணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்...
👉🏼மாவட்ட அளவில் மாலைநேர ஆரப்பாட்டம் ,கவன ஈர்ப்பு போராட்டம் சென்னையில் பேரணி, ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் என படிப்படியாக போராட்டம் தீவிரப் படுத்தப்பட்டு தற்போது செப்டம்பர் 7 முதல் தொடர் வேலைநிறுத்தம் மற்றும் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டு *தினமும் கைதாகி வருகின்றனர்...
👉🏼40 ஆயிரம் 50 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் எதற்கு போராட வேண்டும் ? என்ற கேள்வி மக்களிடையே எழக்கூடும்...
அனைத்து ஆசிரியர்களும் 40,50 ஆயிரம் வாங்குவதில்லை , அப்படியே வாங்கினாலும் *அது அவர்களின் உயர்கல்வி(M.A/M.SC, B.ED,M.ED, M.PHIL/ PH.D) தகுதிக்கும் மற்றும் 10 ஆண்டு 20ஆண்டு பணி முடித்த பின் வழங்கப்படும் சிறப்பு நிலை தேர்வு நிலை பெற்றதாலே ஆகும்...
*ஆசிரியர் பணியில் சேர்ந்த உடனே 40,50ஆயிரம் வழங்கி விடுவதில்லை... சாதாரணமாக *1முதல் 5வரை கற்பிக்க முதன் முதலில் பணியில் சேரும் ஆசிரியருக்கான ஊதியம் மாதம் ரூ16000/-*இது தான் உண்மை..
*👉🏼இந்த ஊதியம் தள்ளுவண்டியிலபானிபூரி, விற்கும் தொழிலாளியின் ஊதியத்தை விட குறைவு ...
👉🏼10ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைப்படும் ஊதிய விகிதம் *2006 க்கு பிறகு தற்போது 2017 ல் விலைவாசி விண்ணைத் தொடுமளவு உயர்ந்துவிட்ட காலத்தில் புதிய ஊதியவிகிதம் கேட்பதில் தவறென்ன ...
*👉🏼2006 ல் வீட்டு வாடகை , பெட்ரோல், அரசி பருப்பு இதர அத்தியாவசிய பொருட்கள் விலை எவ்வளவு தற்போது எவ்வளவு ? ஊதியம் உயர்த்தி கேட்க கூடாதா ?
👉🏼ஆசிரியர்கள் கற்பித்தல் பணி மட்டுமல்ல, *தேர்தல் பணி , மக்கள் தொகை கணக்கெடுப்பு , ஆதார் இணைப்பு பணிகள், சுகாதார பணிகள், வாக்காளர் அட்டை,எமிஸ் பதிவேற்றம்- நீக்கம்,14 வகையான விலையில்லா பொருட்களை எடுத்து வந்து மாணவர்களிடம் சேர்த்தல்(சீருடை,புத்தகம்,குறிப்பேடு,காலணி போன்ற),உதவித்தொகை,100 க்கும் மேற்பட்ட பதிவேடுகள் தொடர்பான பணிகள் என பல பணிகளையும் சேர்த்தே செய்கின்றனர்...
👉🏼கவர்ச்சியான விளம்பரங்கள் , ஆடம்பர வசதிகள் இதனாலே தனியார் பள்ளிகள் மிளிர்வது போல் தெரிந்தாலும் *கல்வித் தரத்தில் அரசு பள்ளிகளே முதன்மை பெறுகின்றன... இதனை பொதுதேர்வு முடிவுகள் தெளிவு படுத்தும்..
👉🏼இத்தகைய ஆசிரியர் போராட்டங்களை கைது நடவடிக்கைகளை, டிவிக்கள் கேலி செய்வதும் , இருட்டடிப்பு செய்வதும் நாட்டின் ஊடகத்துறையின் உண்மை மழுங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுகிறது..
👉🏼"கத்திமுனையை விட பேனா முனை கூர்மையானது " ஆனால் இன்று ?
👉🏼அரசின் அங்கமாக விளங்கும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது...
நீதிபதி கிருபாகரனின் ஆலோசனைப் படியே எல்லோருக்கும் ஒரே ஊதியம் என்பதை நாம் ஏற்றுக் கொள்வோமே .... எனக்கு 20,000 சம்பளம் என்றால் கிருபாகரனுக்கும் 20,000 சம்பளம் ...
இந்த டீலுக்கு கிருபாகரன் தயாரா ?
தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கு கிருபாகரன் பொறுப்பேற்று கொள்வாரா ..???
நீதிமன்றத்தில் மட்டும் ஆட்கள் பற்றாகுறை இருக்க கூடாது .ஆனால் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் ஆட்கள் பற்றாகுறை இருக்கலாம் இல்லையா?