2 மணிக்குள் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எச்சரிக்கையை அடுத்து போராட்டத்தை அரசு ஊழியர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதனிடையே பகல் 2 மணிக்குள் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.முன்னதாக போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்த நிலையில் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.