நீட் தேர்வு விவகாரம்: கலந்தாய்வுக்கு வந்த அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்!..
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், நடப்பு கல்வியாண்டில் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
அதன்படி, நேற்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டுப் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிலையில்,பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.மதியம் 2 மணிக்கு தொடங்குவதாக இருந்த இந்த நிகழ்ச்சிக்கு, 2.45 மணியளவில் பாலகிருஷ்ண ரெட்டி வேப்பேரியில் உள்ள கால்நடை பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்தார்.
இதனிடையே, நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு, மருத்துவப் படிப்பில் கலந்துகொள்ள முடியாத பலர் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.இவர்கள், அமைச்சர் வந்ததும் அவரை முற்றுகையிட்டு, நீட் தேர்வை ரத்து செய் என்று கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில், கலந்தாய்வில் கலந்துகொண்ட அமைச்சர் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கினார். அப்போது பேசிய பாலகிருஷ்ண ரெட்டி, 'தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உலகத்தரத்துக்கு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
கால்நடைத் துறையில் விரைவில் 900 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்' என்றார்.இதையடுத்து, அமைச்சர் புறப்படும்போது கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் அவரை மீண்டும் முற்றுகையிட்டனர். நீட் தேர்வு நடைபெற்றதால், மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. என்று தெரிவித்தனர். மக்கள் முற்றுகையிட்டதால், போலீசார் பாதுகாப்புடன் அமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.