மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை கணக்கு வகுப்பு எடுத்தார்.
அனைவரும் இணைந்து வாசிப்போம்' என்னும் திட்டத்தை மத்தியப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, போபாலில் உள்ள மௌலானா ஆஸாத் தேசிய தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் இருக்கும் அரசு நடுநிலைப்பள்ளிக்கு மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை சென்றார்.
அங்கு அவர், மாணவர்களுக்கு நாள் முழுவதும் பாடம் நடத்தினார். கணக்குப் பாடம் குறித்து மாணவர்களுக்கு சிவராஜ் சிங் சௌஹான் வகுப்பெடுத்ததுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், "புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்கு சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும்; மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வந்தாலும், ஆறுகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் அசுத்தமான நீர் கலப்பது நிறுத்தப்படாமல் போனாலும், மனித இனத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும்' என்றார்.
இதேபோல், மத்தியப் பிரதேசம் முழுவதும் 2.15 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 96 லட்சம் மாணவர்களுக்கு சனிக்கிழமை பாடம் நடத்தப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.