டிமிக்கி' ஆசிரியர் இருவர் 'சஸ்பெண்ட்' : தொடர்'களை'யெடுப்பால் கலக்கம்
பணியின்போது 'டிமிக்கி' கொடுத்து வெளியே சென்ற கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளி ஆசிரியர்கள் இருவரை, 'சஸ்பெண்ட்' செய்து இணை இயக்குனர் பொன்குமார் உத்தரவிட்டார்.
இரண்டு மாதங்களில், இத்துறையில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 பேர், இதுவரை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதால், துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இத்துறையில் 290 பள்ளிகள் உள்ளன. 54 விடுதிகளில் 4800க்கும் மேல் மாணவர் தங்கி படிக்கின்றனர். விடுதிகளில், மாணவர் எண்ணிக்கையை போலியாக கணக்கு காட்டி அதற்கான அரிசி, பருப்பு மற்றும் சமையல் பொருட்கள் வினியோகம் பெற்று முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்து, திண்டுக்கல் அரசு விடுதி காப்பாளர் காசிராஜன், உசிலம்பட்டி மாணவர் விடுதி காப்பாளர் பாலமுருகன், மாணவிகள் விடுதி காப்பாளர் ராணி ஆகியோரை, இணை இயக்குனர் பொன்குமார், ஜன.,27ல் 'சஸ்பெண்ட்' செய்தார். மேலும் போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்த உசிலம்பட்டி விடுதி சமையலர் பால்பாண்டி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதற்கு முன் ஜன., முதல் வாரத்தில் திண்டுக்கல், தேனி மாவட்ட விடுதி காப்பாளர்கள் உட்பட 3 பேர் முறைகேடு புகார்களில் சிக்கி 'சஸ்பெண்ட்' செயப்பட்டனர்.
தொடர் 'களை'யெடுப்பு: இந்நிலையில், பணி நேரத்தில் வருகைபதிவேட்டில் கையெழுத்திட்டு, சொந்த வேலைக்காக ஆசிரியர்கள் சிலர் வெளியில் செல்வதாக புகார் எழுந்தது.
இதுகுறித்த விசாரணையில், பயிற்சிக்கு செல்வதாக கூறி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு பயிற்சியில் பங்கேற்காத, போடி கிழக்கு கள்ளர் நடுநிலைபள்ளி ஆசிரியர் வாஞ்சிநாதன், தாமதமாக பள்ளிக்கு சென்று வருகை பதிவேட்டில் திருத்தம் செய்ததால் கருவேலநாயக்கன்பட்டி ஆசிரியர் மலைச்சாமி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இதுகுறித்து பொன்குமார் கூறுகையில், "உரிய விசாரணைக்கு பின் 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்பட்டது. முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்," என்றார்