பிளஸ் 2 பொதுத்தேர்வு; வந்தது வினாத்தாள்!!!
பிளஸ் 2 பொதுத்தேர்வு; வந்தது வினாத்தாள்!!!
தமிழகம் முழுவதும், மார்ச் 2ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கும், மார்ச் 8ம் தேதி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன.
கோவை கல்வி மாவட்டத்தில், 101 மையங்களில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும், 72 மையங்களில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகளும் நடக்கின்றன.
இங்கு, 65 ஆயிரத்து 708 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு, வினாத்தாள் வினியோகித்தல், விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒருங்கிணைக்க, 13 இடங்களில், நோடல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் வாரியாக, நோடல் மையங்களுக்கு, வினாத்தாள் பகிர்ந்தளிக்கும் பணிகள் நடக்கின்றன.
கோவை கல்வி மாவட்டத்திற்கான வினாத்தாள், அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில், நேற்று பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. வினாத்தாள் பாதுகாக்க, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அப்பள்ளியில் இருந்து, 13 நோடல் மையங்களுக்கும், வினாத்தாள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் தெரிவித்தார்.