மாணவர்கள் நீண்ட விடுப்பு 100 சதவீத கனவு தகர்ப்பு!
நீண்ட நாள் விடுப்பில் உள்ள மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளதால், தேர்வில் பங்கேற்காத பட்சத்திலும், தோல்வியை தழுவியவர்களாக குறிப்பிடப்படுகிறது. இதனால், நுாறு சதவீத தேர்ச்சி பெற முடியாத நிலை இருப்பதாக, தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழகம்முழுக்க, மார்ச் 2ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கும், மார்ச் 8ம் தேதி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு துவங்குகிறது. பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட, மாணவர்களின் தகவல்கள் கொண்டு, பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவல், ஆண்டு துவக்கத்திலே பதிவு செய்யப்பட்டு சரி பார்க்கப்பட்டவை. எனவே, அனைத்துமாணவர்களின் தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.இதில், தொடர்ந்து நான்கு மாதங்களாக, பள்ளிக்கு வராமல், தேர்வு எழுதாத மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், பல அரசுப்பள்ளிகளில், தலா நான்கு மாணவர்கள் வீதம், நீண்டநாள் விடுப்பில் உள்ளனர்.இவர்களில், பெரும்பாலானோர் செய்முறை பொதுத்தேர்வு எழுதவரவில்லை என கூறப்படுகிறது. எழுத்துத்தேர்வுக்கும் வராத பட்சத்தில், 'ஆப்சென்ட்' என குறிப்பிட்டு, தேர்ச்சியடையாதோர் பட்டியலில் சேர்க்கப்படும். இதனால்,நுாறு சதவீத தேர்ச்சி பெறும் முயற்சிக்கு தடை ஏற்பட்டுள்ளதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'நீண்டநாள் விடுப்பில் இருக்கும் மாணவர்கள், எந்த தேர்வும் எழுதாதபட்சத்தில், அவர்களை தோல்வியடைந்தவர்களாக குறிப்பிடக்கூடாது.
ஒரு தேர்வு கூட எழுதாதபட்சத்தில், விடுப்பில் இருக்கும் மாணவர்களால், 100 சதவீத தேர்ச்சிஇலக்கு, தடைபடுகிறது. 'எனவே, தேர்வு எழுதியோரை கணக்கிட்டு,நுாறு சதவீத தேர்ச்சி பள்ளிகளின் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றனர்.