TET 2017 Exam - தேர்வு தேதியும் மாற வாய்ப்பு
TET 2017 Exam - தேர்வு தேதியும் மாற வாய்ப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு..
தேர்வு தேதியும் மாற வாய்ப்பு..
ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை, மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு, மார்ச் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அரசு அறிவித்து, தேர்வு மையங்களை இறுதி செய்திருந்தது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறும் அதே மையங்கள்தான், ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவது: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் நடைபெறும். அப்போது, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த தேதி, தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொது தேர்வு நிறைவு பெறும் வரை, தேர்வு மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த அனுமதிக்க இயலாது. எனவே, நடுநிலைப்பள்ளி, துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நடத்த தேவையான, அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகள் (டேபிள், சேர், குடிநீர், விளக்கு, பேன், கழிவறை வசதிகள்) இருப்பது குறித்து, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் தகுதியான பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு விடும்.
இதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வு தேதியும், விரைவில் மாற்றம் செய்யப்படும். புதிய அமைச்சரவை அமைய இருப்பதால், தேர்வு தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.