>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 16 பிப்ரவரி, 2017

இஸ்ரோ உலக சாதனை - 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி37 ராக்கெட்..

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 714 கிலோ எடை கொண்ட கார்ட்டோ சாட்-2 செயற்கைகோள் மற்றும் 664 கிலோ எடை கொண்ட 103 செயற்கை கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.
320 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதில் வெளிநாடுகளைசேர்ந்த 101 நானோ வகை செயற்கைகோள்களும், நமது நாட்டை சேர்ந்த 2 நானோ வகை செயற்கைகோள்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. அதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும். 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் 37 செயற்கைகோள்களை ரஷ்யா ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியதே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.