சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புக்கு அடுத்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டு (2017-18) முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாநிலப் பாடத்திட்டத்தைப் போலவே, சிபிஎஸ்இ வழிக் கல்வியிலும் பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறை அமலில் இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அந்த நடைமுறை கடந்த 2010-ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தாமல் இருப்பது சிபிஎஸ்இ கல்வியின் தரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர். மேலும், நேரடியாக பிளஸ்-2 பொதுத் தேர்வை எதிர்கொள்வது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அவற்றைக் கருத்தில் கொண்டே பத்தாம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது அதேபோல், சிபிஎஸ்இ பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்வது குறித்து மத்தியக் கல்வி ஆலோசனை வாரியம் ஏற்கெனவே பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
இம்மாத இறுதியில் சிபிஎஸ்இ வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான தீர்மானம் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும். எனவே, அடுத்த கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடைமுறை அமலாகும் என்றார் அவர்.