5500 கி.மீ சென்று எதிரியை தாக்கும் திறன் கொண்ட அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியாவின் பாதுகாப்பு திறனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 5500 கி.மீ சென்று எதிரியை தாக்கும் அக்னி 5 வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதித்து பார்க்கப்பட்டது. ஒரிசா அருகே வங்கக்கடலில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. 1500 எடை வரை அணு ஆயுதங்களை சுமந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் உடையது இது. ஏற்கனவே அக்னி வரிசையில் மூன்று ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் இடம்பெற்றுள்ளன. அக்னி 4 மற்றும் 5 ஏவுகணைகள் சீனாவின் வடக்கு பகுதி வரை சென்று தாக்கும் திறன் உள்ளதால் பாதுகாப்பு தொடர்பான மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகின்றன.
அக்னி ஏவுகணை டிஆர் டிஓ எனப்படும் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஏவுகணைகளை தடுக்கும் போர் தடுப்பு முறைகளையும் இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. அக்னி ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்து பார்த்ததன் மூலம் ஏவுகணை தொழில்நுட்ப திறன் நாடுகளின் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டே சேர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.