சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளது வர்தா புயல்: சேதம் அதிகமாக இருக்கும் என தகவல்.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாவும் வட தமிழகத்தில் இதனால் கனமழை பெய்யும் என்றும் தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வர்தா புயல் இன்று காலை 8.30 மணி
நிலவரப்படி 440 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் சென்னைக்கு மிகவும் அருகே கரையை கடக்கும் எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேதம் அதிகமாக இருக்கும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வர்தா புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.