தினமலர் 'லட்சிய ஆசிரியர் 2016' விருது; டி.இ.ஓ., வழங்கினார்
மதுரை: "மாணவர்கள் திறமையை கண்டறிந்து அவர்கள் மனதில் இடம் பிடிப்பதே ஆசிரியர் பணியின் உண்மையான வெற்றி," என மதுரையில் தினமலர் நாளிதழ் சார்பில் நடந்த 'லட்சிய ஆசிரியர் --2016' விருது வழங்கும் விழாவில், மதுரை மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) முருகானந்தம் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான பணியை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தினமலர் நாளிதழ் சார்பில் 'லட்சிய ஆசிரியர்' விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கு தேர்வான 25 பேருக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.
விருதுகள் வழங்கி டி.இ.ஓ., முருகானந்தம் பேசியதாவது: கற்பித்தல் பணியை ஒவ்வொரு ஆசிரியர்களும் ரசித்து மேற்கொள்ள வேண்டும். தற்போதைய மாணவர்கள் மிகவும் 'ஹைடெக்' ஆக உள்ளனர். அதற்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களின் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அவசியம். கற்பித்தல் பணி, தேர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மாணவர்கள் திறமையை வெளிக்கொணர்ந்து, அவர்களின் இதயங்களில் இடம் பிடிப்பதே உண்மையான ஆசிரியரின் வெற்றி ஆகும். கற்பித்தல் பணி, கண்டுபிடிப்புக்களை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். அதேநேரம் குற்றம், தவறுகளுக்கு ஆட்படாத ஆசிரியர் சமுதாயம் உருவாக வேண்டும். அவ்வாறு இருந்தால் இதுபோன்று பல்வேறு விருதுகள் உங்களை தேடி வரும், என்றார்.
விருது பெற்றவர்கள்
1) கோ.புவனேஸ்வரி, மெப்கோ ஸ்லெங் மழலையர், தொடக்க பள்ளி, திருமங்கலம்.
2) ப.ஹரிபாபு, அரசு உயர்நிலைப்பள்ளி, ஆனையூர், மதுரை.
3) ர.கிறிஸ்டெல்லா, மகாத்மா பாபா பள்ளி, மதுரை.
4) மு.தென்னவன், கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துவக்கப் பள்ளி, யா.ஒத்தக்கடை, மதுரை.
5) எம்.பி.சந்திரகலா, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அய்யன் கோவில்பட்டி
6) ம.சுகந்தி, நாடார் உயர்நிலைப்பள்ளி, நிலக்கோட்டை.
7) வெ.சோ.ராமு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, செ.பாறைப்பட்டி,
8) இ.இலாசர் வேளாங்கண்ணி,காந்திஜி நினைவு நடுநிலைப் பள்ளி, திண்டுக்கல்.
9) ரா.சுமதி, நா.சு.வி.வி.சாலா தொடக்கப் பள்ளி, பட்டிவீரன்பட்டி,
10) ம.பெத்த வண்ண அரசு, அரசு மேல்நிலைப் பள்ளி, அய்யலுார்
11) எஸ்.ஜி.விஜயலட்சுமி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வீரபாண்டி.
12) ரெ.தமிழ்ச்செல்வி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அழகாபுரி
13) கே.சரவண சித்ரா, தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளி, தேனி.
14) கா.கூ.முருகேசன்,நாடார் மேல்நிலைப்பள்ளி, போடி நாயக்கனுார்,
15) சி.சத்தியமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேலப்புதுக்குடி,
16) ஐ.அய்யநாதன், சையது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்.
17) தே.தமயந்தி, அரசு மேல்நிலைப் பள்ளி,செல்வநாயகபுரம்
18) வி.செல்வராஜ், அரசு உயர்நிலைப் பள்ளி,தவத்தாரேந்தல்
19) பெ.செல்லையா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கோட்டவயல்
20) ஞா.மீனாம்பிகை, ஸ்ரீமுருகானந்த நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.
21) வி.ராஜாமணி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சின்னவேங்காவயல்.
22) ச.சந்திராமேரி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வில்லிபத்திரி.
23) எஸ். ராஜசேகரன், இந்து மேல்நிலைப் பள்ளி,வத்திராயிருப்பு.
24) சு.முத்து, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜமீன்சல்வார்பட்டி.
25) சி.மரகதவல்லி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பி.எஸ்.கே.மாலையாபுரம்