6 அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் தர்னா
பணிநிரந்தரம் கோரி 6 ஒடிஸா மாநில அமைச்சர்களின் இல்லங்களை நூற்றுக்கணக்கான பள்ளி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என அறிவிக்கை ஒன்றை மாநில அரசு வெளியிட்டு உறுதி கூறியிருந்தது.
அறிவிக்கை வெளியிட்டு 5 மாதங்கள் ஆகியும் பணியை முறைப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நீண்ட காலமாக ஆர்ப்பாட்டம் செய்து வந்த ஒப்பந்தப் பணி ஆசிரியர்கள், நிதியமைச்சர் பிரதீப் குமார் அமத், உள்ளாட்சித் துறை அமைச்சர் அருண் சாஹு, மின் துறை அமைச்சர் பிரணாப் தாஸ், உணவுத் துறை அமைச்சர் சஞ்சய் தாஸ் வர்மா, சட்டப் பேரவை விவகாரங்களுக்கான அமைச்சர் விக்ரம் கேசரி அரூகா, பள்ளிக் கல்வி அமைச்சர் தேவிபிரசாத் மிஸ்ரா ஆகிய 6 அமைச்சர்களின் இல்லங்களை செவ்வாய்க்கிழமை திடீரென முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். பணியை உடனடியாக நிரந்தரம் செய்யக் கோரி அவர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது குறித்து மாநிலப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கூறியதாவது:
பணிநிரந்தரம் தொடர்பான அறிவிக்கையை அரசு வெளியிட்டு ஐந்து மாதங்களாகிவிட்டன. பணியை முறைப்படுத்துவதற்கான நடைமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
பணி வரன்முறைக்கான வழிகாட்டுதல்களில் ஒடிஸா ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அரசு நிபந்தனை விதிக்கிறது. இதனால் ஒப்பந்தப் பணியில் இருக்கும் சுமார் 17 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பணிநிரந்தரம் செய்யப்படாமல் போகலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் மூன்றடுக்கு ஊராட்சித் தேர்தல் பணியைப் புறக்கணிக்கப் போவதாக ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.