தேசிய கல்விக் கொள்கையை வகுக்க விரைவில் குழு அமைப்பு: ஜாவடேகர்
தேசிய கல்விக் கொள்கையை வகுக்க 10 நாள்களில் குழு அமைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
தில்லியில் திங்கள்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
தேசிய கல்விக் கொள்கையை வகுப்பது தொடர்பாக மாநில அரசுகள், கல்வி நிலையங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள் உள்பட அனைத்துத் தரப்பினருடனும் ஏற்கெனவே விவாதம் நடத்தப்பட்டுள்ளது. டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு அளித்த பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
தேசியக் கல்விக் கொள்கையை வகுக்க கல்வியாளர்கள் அடங்கிய குழு அடுத்த 10 நாள்களில் அமைக்கப்படும். இதற்காக பல்வேறு பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இப்பணியில் ஈடுபட அவர்கள் விருப்பதுடன் உள்ளார்களா? என்பதையும் கேட்டுள்ளோம். ஏனெனில், இப்பணி முடிய மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகும் என்றார் அவர்.
தங்கள் குழு அளித்த பரிந்துரையை பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு வெளியிடவில்லை என்று சுப்பிரமணியன் குறைகூறியுள்ளது குறித்த கேள்விக்கு, "இப்போதைய தேசியக் கல்விக் கொள்கையை மதிப்பீடு செய்வதற்குத்தான் சுப்பிரமணியன் குழு அமைக்கப்பட்டது.
எனினும், அனைத்துத் தரப்புக் கருத்துகளும் புதிய தேசியக் கொள்கையை வகுக்கும்போது பரிசீலிக்கப்படும்' என்று ஜாவடேகர் பதிலளித்தார்.