இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கு ஒடுகத்தூர் மாணவி தேர்வு...
ஒடுகத்தூரை அடுத்த மலையாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நீலகண்டன் மகள் ஹேமமாலினி. இவர் தேசிய, தென்னிந்திய மாநில அளவில் பல தங்கம், வெள்ளி பதங்கங்களை வென்றுள்ளார்.
அணைக்கட்டு,
ஒடுகத்தூரை அடுத்த மலையாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நீலகண்டன் மகள் ஹேமமாலினி. இவர் தேசிய, தென்னிந்திய மாநில அளவில் பல தங்கம், வெள்ளி பதங்கங்களை வென்றுள்ளார். இவர், நாளை (திங்கட்கிழமை) முதல், 23–ந்தேதி வரை இங்கிலாந்து நாட்டில் உள்ள பகாமஸ் பகுதியில் நடைபெறும் காமன்வெல்த் இளைஞர்களுக்கான தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இதற்காக அவர் இங்கிலாந்துக்கு பயணம் செய்துள்ளார்.
இவர், தேசிய அளவில் 3 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம், ஒரு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் தென்னிந்திய அளவில் 3 தங்கப்பதக்கம், மாநில அளவில் 11 தங்கப்பதக்கம், 2 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
2011–ம் ஆண்டு துருக்கியில் உலக பள்ளிகள் அளவில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு 7–ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய மற்றும் தமிழ்நாடு மாநில அளவில் 16 வயது முதல் 18 வயது பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர், ஒடுகத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 முடித்து விட்டு, பொறியியல் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்துள்ளார்.