பி.இ 2ம் ஆண்டு சேர்க்கைக்கு 7,000 பேர் மட்டுமே பதிவு......
காரைக்குடி: தமிழகத்தில் உள்ள 536 பொறியியல் கல்லூரிகளில், பிஇ நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 17ம் தேதி ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வழங்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 14ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. சுமார் ஒரு லட்சம் இடங்கள் உள்ள நிலையில், நேற்று வரை 7,000 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.இதனால் இந்த ஆண்டு பி.இ நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு மாணவர்கள் எண்ணிக்கை குறையும் நிலை உருவாகி உள்ளது.