யோகா தினம் கட்டாயம்... பள்ளி கல்லூரிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு !!
ஐ.நா. சபையில் பிரதமர் நரேந்திர மோடி யோகாவை பற்றிய நன்மைகள் என்னென்ன என்பதையும் , யோகாவின் முக்கியத்துவத்தை பற்றியும் சிறப்புரை நிகழ்த்தினார்.
அதன் பின்னர், ஜூன் 21 ஆம் தேதியானது சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு
வருடமும் ஜூன் 21 ஆம் தேதியை யோகா தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது . அதற்காக மத்திய மாநில அரசுகள் யோகாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் .
வருடமும் ஜூன் 21 ஆம் தேதியை யோகா தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது . அதற்காக மத்திய மாநில அரசுகள் யோகாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் .
இந்நிலையில், யோகா தினத்தை கொண்டாட, கோடை விடுமுறை முடிந்ததும், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச யோகா தினமான ஜூன் 21 வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், யோகா தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இது குறித்த அறிக்கை ஒன்றும் பல்கலைக்கழக மானிய குழுவான யு.ஜி.சி அனுப்பி உள்ளது.அதில், சர்வதேச யோகா தினத்தன்று, நாடு முழுவதும் உள்ள பள்ளி,கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகங்களில் காலை 7 மணி முதல் 8 மணி வரை, யோகா தியான நிகழ்ச்சி நடத்த வேண்டும் எனவும், மேலும் அன்றைய தினம் யோகா தொடர்பான விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது .
தற்போது பள்ளி முடிந்து கோடை விடுமுறை என்பதால், விடுமுறை முடிந்த உடனே யோகாவிற்கான சிறப்பு பயிற்சி தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .