தலைவர்கள் பிறந்த நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறையில்லை'.
தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் ஆகியவற்றுக்காக, பள்ளிகளுக்கு இனி விடுமுறை அளிக்கப்பட மாட்டாது' என, உ.பி., அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
அம்பேத்கரின் 126வது பிறந்த தினம், நேற்று கொண்டாடப்பட்டது.
உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
அம்பேத்கரின் 126வது பிறந்த தினம், நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது. நாட்டுக்காகவும், சமூகத்துக்காகவும் உழைத்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாள் ஆகியவற்றுக் காக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது, சிறிதும் தேவையற்றது.ஏனெனில், பல குழந்தை களுக்கு, பள்ளிக்கு விடுமுறை அளிக் கப்பட்டது ஏன் என்பது கூட தெரியவில்லை.
தலைவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங் களை அறிந்து, குழந்தைகள் ஊக்கம் பெற வேண்டும். அதற்கு அவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில், பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தி, அவர்களை பற்றி குழந்தைகளிடம் தெரிவிக்க வேண்டும்.அம்பேத்கர் வாழ்க்கையில் நடந்த போராட்டங்கள், பலருக்கு ஊக்க சக்தியாக அமைந்தது. அதனால், இனி, தலைவர்களின் பிறந்த நாள்,நினைவு நாள் ஆகியவற்றுக்கு, உ.பி.,யில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட மாட்டாது.
மேலும், பள்ளிகள், ஆண்டுக்கு, 220 நாட்கள் பணி யாற்ற வேண்டும் என, விதிகூறுகின்றன. ஆனால், எந்த பள்ளியும், 220 நாட்கள் பணியாற்றுவது இல்லை. இதற்கு, அதிக விடு முறைகள் தான் காரணம். இதனால், பாடத்தை முடிக்க முடியாமல், ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
எந்த மதத்துக்கும், ஜாதிக்கும், மாநில அரசு, விரோதமானதல்ல. வளர்ச்சியில் பின்தங்கி யுள்ள, சமூகங்களைச் சேர்ந்த மக்களை முன் னேற்றுவதே அரசின் லட்சியம். என் ஆட்சியில், பாரபட்சம், தீண்டாமை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.இவ்வாறு அவர் பேசினார்