ஒன்றும் உதவாத சான்றிதழ் படிப்பு மூடும்நிலையில் இசைப் பள்ளிகள்.
சிவகங்கை மாவட்ட இசைப் பள்ளிகளில் வழங்கப்படும் சான்றிதழ்களை வேலைவாய்ப்பிற்கு ஏற்று கொள்ளாததால், மாணவர்கள் சேர்க்கை சரிந்துள்ளது. இதனால் அவை மூடும்நிலைக்கு தள்ளப்
பட்டுள்ளன.
தமிழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, நெல்லை உட்பட 17 மாவட்டங்களில் இசைப் பள்ளிகள் உள்ளன. இங்கு குரலிசை, பரதம், மிருதங்கம், வயலின், தவில், தேவாரம், நாதஸ்வரம் ஆகிய தமிழிசைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பட்டப்படிப்பு போன்று இசைப் படிப்புகளும் 3 முதல் 4
ஆண்டுகளுக்கு பயிற்றுவிக்கப் படுகின்றன.தேர்ச்சி பெறுவோருக்கு அரசு தேர்வுத்துறை மூலம் சான்றிதழ் தரப்படுகிறது. மதிப்பெண் பட்டியல் தருவதில்லை. அந்த சான்றுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதில்லை. அதேபோல் தனியார் மற்றும் வெளிநாடுகளிலும் ஏற்க மறுக்கின்றனர்.
இதனால் மாவட்ட இசைப் பள்ளிகளில் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை சரிய துவங்கியுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 10 க்கும் குறைவான மாணவர்களே பயில்கின்றனர். இதனால் அவை மூடும்நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளன. அவற்றை இசை கல்லுாரிகளாக தரம் உயர்த்தி பள்ளிகளை மீட்க வேண்டும்.தமிழ்நாடு கலைப்பண்பாட்டுத்துறை ஆசிரியர், ஊழியர் பேரவை மாநில பொதுச் செயலாளர் பா.அய்யனார் கூறியதாவது: மதுரை, கோவை, சென்னை, திருவையாறு ஆகிய 4 இடங்களில் அரசு இசை கல்லுாரிகள்
உள்ளன. இங்கு பயில்வோருக்கு தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலை சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது.அதே பாடத்திட்டம் தான் மாவட்ட இசைப் பள்ளிகளிலும் பயிற்றுவிக்கப் படுகின்றன. ஆனால் சான்றிதழ் மட்டும் மாறுபடுகிறது. இதனை வேலைவாய்ப்பு அளிப்போர் ஏற்க மறுக்கின்றனர். இதனால் இசை பள்ளிகளை கல்லுாரிகளாக தரம் உயர்த்துவதோடு, அனைத்து மாவட்டங்களிலும் துவங்க வேண்டும், என்றார்.