நீங்கள் பார்ப்பது அரசு பள்ளிதான்..... 3ம் வகுப்பு மாணவர்களிடம் ஆங்கில நாளிதழைக் கொடுத்தால் மிக அழகாக வாசிப்பார்கள்






நீங்கள் பார்பது அரசு பள்ளிதான்.....
காரணம்...
இப்படியும் ஒரு பெண் ஆசிரியர் Annapurna Mohan ..
தன் நகையை அடகு வைத்து அரசு பள்ளியை மெருகூட்ட ரூ 1,60000 இலட்சம் செலவழித்தும் அரசின் எந்த ஒரு உதவியையும் எதிர்பார்க்காமல் தன் வகுப்பறையை ஆங்கில வழிப் பள்ளிக்கும் மேலாக மெருகேற்றிய விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த மரக்காணம் ஒன்றியம் கந்தாடு அரசு தொடக்கப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியருக்கு பாராட்டுகள்.
அழகான வகுப்பறை.....
தொடுதிரை ஸ்மார்ட் கிளாஸ்...
அதோடு மட்டுமல்லாமல் சேர் எழுத்து மேஜை....
அழகாக ஆங்கிலத்தில் பேசும் 3ம் வகுப்பு மாணவர்கள்.
எந்த ஒரு ஆங்கில நாளிதழையும்..... இது விட வேற என்ன வேணும்.....
அரசு பள்ளியில் இந்த ஆசிரியர் எடுக்கும் வகுப்பு 3 ம் வகுப்பு.. மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது அமெரிக்கன் இங்கீலிஸ் தான்...
அனைத்து 3 ம் வகுப்பு மாணவர்களும் Phonetics method யைப் பயன்படுத்தி மிக தெளிவாக அழகாக படிக்கிறார்கள்..
இந்த 3ம் வகுப்பு மாணவர்களிடம் ஆங்கில நாளிதழைக் கொடுத்தால் மிக அழகாக வாசிப்பார்கள்...
தெளிவாக....
இந்த ஆசிரியர் தயாரித்த சி டி ஆங்கிலத்தில் தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிக்கும் விரைவில் அரசின் மூலமாக வெளிவரப் போகிறது...
மாறுவோம்! மாற்றம் படைப்போம்!!