இயலா குழந்தைகளுக்காக 85 மையங்கள் துவக்கம்.
மாநிலம் முழுவதும் 85 தொடக்க நிலை ஆயத்த மையங்கள் துவக்கப்பட்டு, இயலா குழந்தைகளுக்கு பால், பாதாம், முந்திரி, பிஸ்தாவுடன் நவதானிய கஞ்சி வழங்கப்படுகிறது.
மனவளர்ச்சி குறைவு, பார்வை குறைபாடு, மூளை வளர்ச்சி பாதிப்பு, மூளை
முடக்குவாதம், செவித்திறன் குறைவு என இயலா குழந்தைகள் உள்ளனர். இத்தகைய குழந்தைகளுக்காக, தமிழக அரசு அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், மாநிலம் முழுவதும் 85 தொடக்க நிலை ஆயத்த பயிற்சி மையங்களை துவக்கியுள்ளது.

இம்மையம் காலை 10:00 முதல் மதியம் 3:30 மணி வரை செயல்படும். இங்கு பிறந்தது முதல் ௬ வயதுக்கு உட்பட்ட இயலாக் குழந்தைகள் சேர்க்கப்படுவர். இவர்களுடன் பெற்றோர் வர வேண்டும். குழந்தையின் குறைபாடுகளை அறிந்து, அதற்கு ஏற்ப சிறப்பு ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர்.தினமும் சத்தான உணவுஇங்குள்ள குழந்தைகளுக்கு தினமும் காலையில் வேர்க்
கடலை, பொரிகடலை மாவு கலந்து வாழைப்பழம் வழங்கப்படும். மதியம் பால், பிஸ்தா, முந்திரியுடன் நவதானிய கஞ்சி வழங்கப்படும். விளையாட பொம்மைகள், போக்குவரத்து செலவிற்கு மாதம் 300 ரூபாய் வழங்கப்படும். இம்மையத்திற்கு ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
குணப்படுத்த முடியும்

இயலா குழந்தைகளுக்கு உள்ள பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை அளித்தால் குறைபாடுகளை குறைக்க முடியும். அவர்களது வேலையை, அவர்களே செய்யும் அளவிற்கு கொண்டு வர முடியும். இதுவே மையத்தின் நோக்கம்.
தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம் நகராட்சி 10ம் பகுதி நடுநிலைப் பள்ளியில் இம்மையம் செயல்பட துவங்கியுள்ளது என கல்வித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.