புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8-வது ஊதிய மாற்றக்குழுவை உடனே அமைத்து, ஊதிய மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்.
தமிழகம் முழுவதும் ஏப்.25-ம் தேதி தொடங்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 2 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதா னத்தில் மாநில அளவிலான ஆயத்த மாநாடு நேற்று நடைபெற்றது.
குழுவின் ஒருங்கிணைப்பாள ரும், அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவருமான மு.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம்கூறியபோது, “புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8-வது ஊதிய மாற்றக்குழுவை உடனே அமைத்து, ஊதிய மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் 61 துறைகளைச் சார்ந்த 2 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போராட்டத்தால் அரசின் முக்கிய பணிகள் முடங்கும். இதைஉணர்ந்து, தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்” என்றார்.

விவசாயிகளுக்கு ஆதரவு
அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் வெளியிட்ட அறிக்கை யில், “டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை பிரதமரும் தமிழக முதல்வரும் சந்திக்கவில்லை. இந்நிலையில் மத்திய, மத்திய, மாநில அரசுகள் விவசாயத்தையும், விவசாய தொழிலாளர்களையும் பாதுகாக்க வலியுறுத்தி வரும் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்ட தலைநகரங்களிலும் அரசு ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என கூறப்பட்டுள்ளது.