உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு 5000 பரதக் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி, தமிழ் புத்தாண்டு அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

நாட்டியக் கலைஞர் அதிர்ஷ்டபாலன் நடன அமைப்பில் உலகப் பொதுமறையான திருக்குறளின், முப்பது திருக்குறள்களை கருவாகக் கொண்டு 5000 பரத நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நடனமாட உள்ளனர். நாட்டிய மேதை பத்மா சுப்ரமணியம் தலைமை நடக்கும் இந்த நடன நிகழ்ச்சி, கின்னஸ் சாதனை முயற்சியாகும். இதற்கான ஏற்பாடுகளை வேல்ஸ் பல்கலைக்கழகம், லஷ்மண் ஸ்ருதி, விசாகா மீடியா ஆகிய நிறுவனங்கள் செய்து வருகின்றன. மாலைமுரசு தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியின் மீடியா பாட்னராக உள்ளது. நிகழ்ச்சி தொடர்பாக, வேல்ஸ் பல்கலைகழக வேந்தர் ஐசரிகணேஷ், லஷ்மண் சுருதி இசைக்குழு லட்சுமண் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தமிழுக்கும், தமிழர்களுக்கும் புத்துணர்ச்சி வழங்குவதாக இந்நிகழ்ச்சி அமையும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பரத கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர். மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அயல்நாடுகளில் இருந்தும் பரதக் கலைஞர்கள் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.