200 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டம்!
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனது. இதையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புழக்கத்தில் இருந்த பணத்தை குறைத்து டிஜிடல் பணப்பரிவர்தனையை அரசு ஊக்குவிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கிக்குழு, புதிய 200 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கிக்குழு உறுப்பினர்கள் மூலம் வெளியாகியுள்ள இந்த தகவல், கூடிய விரைவில் கவர்னர் மூலம் உறுதி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய 200 ரூபாய் நோட்டுக்கான திட்டம் உறுதி செய்யப்பட்டவுடன், வரும் ஜூன் மாதம் முதல் நோட்டுகளை அச்சிடும் பணிகள் தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.