NEET EXAM - மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவிப்பு
மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் 80 இடங்களில் இந்த நீட் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவச் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. நீட் தேர்வு எழுதுவோர் இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்திற்கு நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நீட் தேர்வு எழுதாமல் பழைய முறைப்படி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வழிவகை செய்யும் சட்டமுன்வடிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.