Jio வுக்கு சவால் விட இணைகின்றன idea & Vodafone, அதிர்ச்சியில் Air Tel & Jio நிறுவனங்கள்.
இந்திய டெலிகாம் சந்தையில் 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் idea செல்லுலார் மற்றும் Vodafone ஆகிய நிறுவனங்கள்
இணைந்திட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன.
இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு இந்திய டெலிகாம் சந்தையைப் புரட்டிப்போடக்கூடியதாக இருக்கும் என்பதால் முதல் இடத்தில் இருக்கும் Air Tel நிறுவனமும் சரி, புதிதாய் களமிறங்கியுள்ள Jio வும் அதிர்ச்சியில் உள்ளன.
இந்த இணைப்பின் மூலம் idea நிறுவனத்தின் பங்குகளை Vodafone பெற உள்ளது.
Vodafone இந்தியா மற்றும் ஆதித்யா பிர்லா குழுமம் மத்தியிலான பேச்சுவார்த்தையில், Vodafone இந்தியா (இன்டஸ் டவர்ஸ் நிறுவனத்தில் இதன் 42 சதவீத முதலீடு இதில் சேர்க்கப்படாது) நிறுவனத்தை முழுமையாக idea செல்லுலார் பங்குகள் வாயிலாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.
இதற்காக Vodafone இந்தியா, idea செல்லுலார் நிறுவனத்தின் பங்குகளைப் பெற உள்ளது.
தற்போதைய நிலையில், Air Tel 27 கோடி வாடிக்கையாளர்களையும், ரிலையன்ஸ் Jio 7.2 கோடி வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ள நிலையில் Vodafone மற்றும் idea இணைப்பில் இக்கூட்டணி நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 39 கோடியாக உயர்ந்து இந்திய சந்தையில் முதல் இடத்தைப் பிடிக்க உள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தக அளவுகளின் படி 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் Vodafone மற்றும் idea நிறுவனங்கள் இணைவதன் மூலம் டெலிகாம் சந்தையில் 1.75 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் இறங்கியுள்ள ரிலையன்ஸ் Jio வின் வர்த்தக வாய்ப்பும் வளர்ச்சியும் அதிகளவில் குறைய வாய்ப்பு உள்ளது.
Vodafone மற்றும் idea இணைப்பில் இக்கூட்டணி நிறுவனம் முதல் இடத்தைப் பிடிக்கும், Jio வின் விரைவான வளர்ச்சி மற்றும் Aircel இணைப்பின் மூலம் Jio கூட்டணி 2வது இடத்தைப் பிடிக்க உள்ள நிலையில், Air Tel நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 3வது இடத்திற்குச் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Vodafone மற்றும் idea நிறுவனத்தின் இந்திய டெலிகாம் சந்தையில் புதிய திருப்பத்தைக் கொண்டு வரப் போகிறது.
வர்த்தக ரீதியாக அனைத்து நிறுவனங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படும் என்பது உறுதி.
இப்புதிய வர்த்தகப் போட்டியின் காரணமாக டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு இனி குறைவான விலையில் மிகச்சிறந்த சேவை கிடைக்கும்.
இன்றைய நிலையில் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளிக்கவில்லை என்றால் சந்தையில் நிலைத்திருக்க முடியாது.
இதுவே சிறப்பான சேவை அளிக்க முக்கியக் காரணமாக அமையும்.