ஓபிஎஸ் அணியில் கல்வி அமைச்சர் பாண்டியராஜன்: எல்லா எம்எல்ஏக்களும் வருவார்கள் என நம்பிக்கை
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் நேற்று நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஓபிஎஸ்ஐ ஆதரிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால், அக்கட்சியில் அடுத் தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சென்னை ஆர்.ஏ.புரம் கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு நேற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வந்து ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம்வரை சசிகலாவுக்கு ஆதரவு அளித்து வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டிய ராஜன், நேற்று காலை திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வாக்காளர்களின் குரலுக்கு செவி சாய்ப்பேன்’ என பதிவு செய்திருந்தார். கட்சியின் ஒற்று மைக்காகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழையும் கருத்தில் கொண்டு முடிவெடுப் பேன் என்றும் அவர் தெரி வித்திருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று பகல் 1 மணி அளவில் சுமார் 500க்கும் மேற்பட்டோருடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத் துக்கு வந்த பாண்டியராஜன், தனது ஆதரவை தெரிவித்தார். திடீரென கூட்டம் கூடியதால், அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஓபிஎஸ் அணிக்கு வந்த அமைச்சர் பாண்டியராஜனை தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். பின்னர், நிருபர்களிடம் கே.பாண் டியராஜன் கூறியதாவது: 3 வருடம் 6 மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா தலைமையில் என்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டேன். அதிமுக எஃகு கோட்டையாக இருக்க வேண்டும் என்றால் ஓபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அங்குள்ள ஒவ்வொரு எம்எல் ஏக்களும் இதைத்தான் எதிர்பார்க் கிறார்கள். அவர்கள் எல்லோரும் இங்கு வருவார்கள். எந்த வகையிலாவது அதிமுகவில் பிளவு ஏற்படும் என எதிர்பார்க்கும் திமுகவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். வாக்களித்த மக்கள் எல்லோரும் ஓபிஎஸ் ஆட்சி அமைய வேண்டு மென விரும்புகின்றனர். அந்த வகையில் மக்களை சந்தித் தோம். மக்களின் ஆதரவு ஓபிஎஸ்-க்கு இருக்கிறது. எனவே, அவரது தலைமையிலான ஆட் சிக்கு ஒருங்கிணைந்து நிற்போம். அதற்காக பாடுபடுவோம். இவ் வாறு அவர் கூறினார். 2 எம்.பி.க்கள் ஆதரவு
முன்னதாக கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக எம்பி அசோக் குமார், நாமக்கல் தொகுதி எம்பி பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் நேற்று காலை 10 மணியளவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். அசோக்குமார் எம்.பி. கூறும்போது, ‘‘முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி, அதிமுக தொண் டர்களை கொண்டதாகும். மற் றொரு அணி தொண்டர்கள் அல்லாமல் இருக்கிறது. அதி முகவில் சில கருங்காலிகள் நுழைந்துள்ளனர். அதை தூள் தூளாக்க வந்தவர் ஓபிஎஸ். குறுக்கு வழியில் ஆட்சியில் அமர அவரை கட்டாயப்படுத்தி, மிரட்டியும் கையெழுத்து வாங்கி யுள்ளனர். இதற்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள். அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களுக்கு ஓபிஎஸ்-ஐ ஆதரிக்கின்றனர்’’ என்றார். பி.ஆர்.சுந்தரம் கூறும்போது, ‘‘ஓ.பன்னீர்செல்வத்தின் துணிச்சலான முடிவை வரவேற்கிறேன். அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் வரவேற்கிறார்கள். தற்போது முதல்கட்டமாக நாங்கள் 2 பேர் வந்துள்ளோம். அடுத்த 2, 3-ம் கட்டமாக மற்ற எம்பிக்களும் இங்கு வருவார்கள். தம்பிதுரையை தவிர மற்ற எம்பிக்கள் வந்து ஓபிஎஸ்-க்கு ஆதரவு தருவார்கள். முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு 15 பேர் கொண்ட குழுவினர் ஜேம்ஸ்பாண்ட் அணியைபோல செயல்பட்டனர். எங்களை ஜெயலலிதாவின் உடலை பார்க்கக்கூட அனுமதிக்க வில்லை. அந்த இரவே யாரை முதல்வராக்குவது, எப்படி ஆட் சியை பிடிப்பது என சதிதிட்டம் தீட்டினார்கள். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திய பெருமை ஓபிஎஸ்-ஐ சாரும். முதல்வர் ஜெய லலிதாவின் இறப்பில் உள்ள மர்மத்தை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றார்.