சேமிப்பு கணக்கில் இருந்து இனி வாரம் ரூ.50 ஆயிரம் எடுக்கலாம்: ஆர்.பி.ஐ
பொதுமக்கள் வரும் 20-ஆம் தேதி முதல் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து இனி வாரம் ரூ.50 ஆயிரம் பணம் எடுக்கலாம் என்று ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நவம்பர் 8-ஆம் தேதி அன்று பிரதமர் மோடி புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தார். அத்துடன் வங்கியில் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன் பிறகு ஐம்பது நாட்கள் கழித்து கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளரத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று ஒரு அறிவிப்பை ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் வரும் 20-ஆம் தேதி முதல் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து இனி வாரம் ரூ.50 ஆயிரம் பணம் எடுக்கலாம் என்று ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.