ஐபோன் 8-ல் கட்டாயம் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இடம்பெறும்
ஆப்பிள் ஐபோன் 8-ல் வயர்லெஸ் சார்ஜிங் வசதி நிச்சயம் வழங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் அம்சங்களை பார்ப்போம்.
பீஜிங்:
ஆப்பிள் நிறுவனம் 2017-ல் மூன்று ஐபோன்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக வெளியான பல்வேறு தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சீனாவை சேர்ந்த KGI செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் மிங்-சி-கியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் 2017-ல் வெளியாக இருக்கும் மூன்று ஐபோன்களிலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் 2017 ஐபோனில் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை வழங்குமா அல்லது ஆப்பிள் நிறுவனம் தனக்கென புதிய தரத்தை உருவாக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
வழக்கமான ஆப்பிள் வழிமுறையை வைத்து பார்க்கும் போது ஆப்பிள் புதிய தரத்திலான வயர்லெஸ் சார்ஜிங் வழிமுறைகளை உருவாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆப்பிள் வெளியிட இருக்கும் மூன்று ஐபோன்கள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும் என்றும் இதில் ஒன்று ஐபோன் X என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
புதிய வகை டிஸ்ப்ளே தொழில்நுட்பம் ஐபோன் X-ல் மட்டுமே வழங்கப்படும் என்றும் இது சமீபத்திய கேலக்ஸி போன்களில் வழங்கப்பட்டதை போன்றே 'fixed flex' திரையை பயன்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன் டச் ஐடி சென்சாரில் சினாப்டிக்-ன் ஆப்டிக்கல் சார்ந்த கைரேகை ஸ்கேனர் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
ஐபோன் X-ல் வழங்கப்படும் செல்லுலார் மோடம்களை இன்டெல் மற்றும் குவால்காம் நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகின்றது. இந்த தொழில்நுட்பத்தின்மூலம் லேசர் சென்சார், இன்ஃப்ரா ரெட் சென்சார், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.