இன்று மத்திய பட்ஜெட்: ரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்?
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை பொது பட்ஜெட்டுடன் இணைந்து முதல் முறையாக தாக்கல் செய்ய உள்ள ரயில்வே பட்ஜெட்டில் தில்லி-ஹெளரா மற்றும் தில்லி-மும்பை மார்க்கங்களில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது மற்றும் ரயில்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
நாட்டில் சுமார் 92 ஆண்டு காலமாக மத்திய பொது பட்ஜெட் தனியாகவும், ரயில்வே பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்படுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அரசின் சீர்திருத்த செயல்திட்டத்தின்படி இம்முறை இரண்டு பட்ஜெட்களும் நாடாளுமன்றத்தில் இணைத்து தாக்கல் செய்யப்பட உள்ளன. அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ள புதிய பட்ஜெட்டில் ரயில்வே நிர்வாகத்தின் நிதிநிலைமை, திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சில பத்திகள் கூடுதலாக இடம்பெறும் என்று தெரிகிறது.
ரயில்வே பட்ஜெட்டில் தில்லி-ஹெளரா மற்றும் தில்லி-மும்பை மார்க்கங்களில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது, ரூ.20,000 கோடி மதிப்பில் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இது தவிர, புதிய இருப்புப்பாதைகளை அமைப்பது, டீசல் ரயில்களை மின்சார ரயில்களாக மாற்றுவது, நவீனமயம், தனியார் பங்களிப்புடன் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சி மீது கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், அனைத்து ரயில் நிலையங்களையும் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்ததாக மாற்றுவது, மத வழிபாட்டுத் தலங்களுக்கு ரயில் இணைப்பை ஏற்படுத்துவது ஆகியவை தொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.