தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியியல், தமிழ்வழி புவியியல் உட்பட 26 புதிய படிப்புகள் அடுத்த ஆண்டு அறிமுகம்
சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அப் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் 14 ஆயிரம் பேர் பட்டம் பெறுகிறார்கள். தமிழ்நாடு திறந்தநிலைப் பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.பாஸ்கரன் 'தி இந்து'வுக்கு சிறப்பு பேட்டியளித் தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அரசு பல்கலைக்கழகமான தமிழ் நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை, சான்றிதழ், டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ என பல்வேறு நிலைகளில் 132 வகை யான படிப்புகளை தொலைதூரக் கல்வியில் வழங்கி வருகிறது. இதுவரையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பட்டயதாரிகளை உருவாக்கியுள்ளது. ஆண்டு தோறும் ஒரு லட்சம் பேர் பல்வேறு படிப்புகளில் சேருகிறார்கள். இங்கு படிப்பதற்கு எந்தவிதமான வயது வரம்பும் கிடையாது.திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் பட்டப் படிப்பு செல்லுமா என்ற சந்தேகம் பொதுவாக மாணவர்கள் மத்தியில் நிலவி வருகிறது. 10-ம் வகுப்புக்குப் பிறகு பிளஸ் 2 முடித்துவிட்டு அதன் பிறகு இளங்கலை பட்டப் படிப்பில் படித்தால் அது செல்லும். ஒருவேளை பிளஸ் 2 முடிக்க வில்லை எனில் நாங்கள் நடத்தும் 3 மாத கால இணைப்பு படிப்பு (பிரிட்ஜ்) முடித்து அதன்பிறகு பட்டப் படிப்பு படித்தால் அதுவும் ஏற்றுக்கொள்ளப்படும்.

தமிழகம் முழுவதும் தொலை தூரக் கல்வியில் படிப்புகளை நடத் துவதற்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு வழங்கப்படும் ஒவ்வொரு படிப்புகளுக்கும் தனித்தனியே அங்கீகாரம் பெற்றுள்ளோம். இந்தியாவில் 13 திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் யுஜிசி 12-பி அந்தஸ்து பெற்ற 3 திறந்தநிலை பல்கலைக் கழகங்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் ஒன்று. 2017-18-ம் கல்வி ஆண்டில் எம்ஏ (கல்வியியல்), எம்ஏ (ஒப்பிலக்கியம்), எம்எஸ்சி புவியியல் (தமிழ்வழி) ஆகிய முதுகலை பட்டப் படிப்புகள், கவுன்சிலிங், சைபர் கிரைம், கல்வி தொழில்நுட்ப மேம்பாடு, தகவல் தொழில்நுட்பவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலை டிப்ளமோ படிப்புகள், கிளவுட் கம்ப்யூட்டிங், கானுயிர் சுற்றுலா, ஆங்கில மொழித்திறன், சூரிய ஒளி மின்தகடு நிறுவுதல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களில் டிப்ளமோ படிப்புகள், பருவநிலை மாற்றம், தங்க வேலைப்பாடு, மணப்பெண் அலங்காரம், ஆடை வடிவமைப்பு ஆகியவற்றில் சான்றிதழ் படிப்புகள் என 26 விதமான புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மேலும், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, ஆன்லைனில் சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளை வழங்குவது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்துடன் (இக்னோ) ஒப்பந்தம் செய்துள்ளோம்.
தமிழ் நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் சமுதாய கல்லூரிகளில் (கம்யூனிட்டி காலேஜ்) குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழிற்கல்வி படிப்புகளில் சேரலாம். இதற்கு ஆண்டு கட்டணம் ரூ.1,000 மட்டுமே. இங்கு படித்து முடிப்பவர் களுக்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சான்றிதழ், மத்திய அரசின் தேசிய திறன் மேம் பாட்டுக்கழகத்தின் சான்றிதழ் என 2 வகையான கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்துடன் இணைந்து 14 விதமான விவசாயம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ படிப்பு களை வழங்குகிறோம் ரூ.4,050 மதிப்புள்ள இந்த படிப்புகளுக்கு மாணவர்களிடமிருந்து வெறும் 50 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக் கிறோம். இந்த படிப்புகளில் காளான் வளர்ப்பு, இயற்கை விவசா யம், மாடி தோட்டம், மருத்துவம், வாசனை திரவிய தாவரங்கள் வளர்ப்பு உள்ளிட்டவை குறிப்பிடத் தகுந்தவை. இவ்வாறு துணைவேந்தர் கூறினார்.