முடக்கப்பட்ட டெபிட் கார்டு: புதிய அட்டை எப்போது கிடைக்கும்? எஸ்பிஐ பதில்
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், பாதுகாப்புக் காரணங்களுக்காக அதனுடைய ஏடிஎம்களை மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏடிஎம் கார்டுகளின் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் எஸ்பிஐ வங்கியின் 6 லட்சம் டெபிட் கார்டுகள் உட்பட 30 லட்சத்துக்கும் மேற்பட்ட டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டன்.
இது குறித்து எஸ்பிஐ வங்கி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டிருப்பதாவது, வங்கி வாடிக்கையாளர்கள், பாதுகாப்புக் காரணங்களுக்காக, பணம் எடுத்தல் மற்றும் பண பரிவர்த்தனைகளை, அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் மட்டும் மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் முடக்கப்பட்ட 6 லட்சம் டெபிட் கார்டுகளுக்கு பதிலாக புதிய டெபிட் கார்டுகள் இன்னும் 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.