தீபாவளிக்கு முதல் நாள் விடுமுறை கிடையாது... பள்ளியை திறக்க வேண்டும் - கல்வித்துறை அதிரடி உத்தரவு !!
தீபாவளி முதல் நாளான வெள்ளிக்கிழமை (27 ஆம் தேதி) அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்ற ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை பள்ளி கல்வித்துறை நிராகரித்துள்ளது. தீபாவளிக்கு முந்திய நாளான வெள்ளிக்கிழமை அன்று முழு நாள் பள்ளி நடைபெறும் என்றும் பள்ளி கல்வி உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (29 ஆம் தேதி) சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி அன்று ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அளித்துள்ளது.
இந்த நிலையில், தீபாவளிக்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். அதாவது தீபாவளிக்கு முன்னதாகவே தங்கள் ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் ஆசிரியர் சங்கத்தினர் இவ்வாறு கோரிக்கை வைத்திருந்தனர்.
இதேபோல், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ - மாணவியர்கள் வெளியூர்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடும் அவதியறும் நிலை ஏற்படும் என்றும் இதனால் தீபாவளி முதல் நாள் வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை வழங்க வேண்டும் என்று ஆசிரியர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் இவர்களின் இந்த கோரிக்கைக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாளை பள்ளிகள் வழக்கம்போல செயல்பட வேண்டும் என தொடக்க கல்வி அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது சம்பந்தமாக பள்ளிகளுக்கு அறிக்கையாகவும், வாய்மொழி உத்தரவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 29ம் தேதியன்று சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. அன்று ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
பணிபுரியும் பெரும்பான்மை ஆசிரியர்கள் தமிழகத்தின் தென் பகுதி மாவட்டங்களில் கடைக்கோடி கிராமங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை பள்ளி முடித்து சனிக்கிழமை தீபாவளி பண்டிகைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும்.
தீபாவளிக்கு முதல்நாள் வெள்ளிக்கிழமையன்று தினம் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.
தீபாவளி முதல் நாள் பஸ்களில் அதிகப்படியான கூட்டம் காணப்படும்.
இதேபோல், மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளும் வழக்கம்போல் நாளை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி துறையின் இந்த அறிவிப்பு ஆசிரியர் சங்கத்தினரை அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.