கல்வி வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை!!!
கல்வி வளர்ச்சிக்கு அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை, என, இந்திய அறிவியல் சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் கணேஷ் பேசினார்.
வேலூர் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில், பாலிமர் அறிவியல் குறித்த, மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கம் நடந்து வருகிறது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்தார்.
வேலூர் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில், பாலிமர் அறிவியல் குறித்த, மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கம் நடந்து வருகிறது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்தார்.
இந்திய அறிவியல் சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் கணேஷ், கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:
கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியை அரசு புறக்கணிக்கிறது. கல்வியும், சுகாதாரமும் முன்னேற்றமடைந்தால் தான், நாடு நல்ல வளர்ச்சி பெறும். ஆனால், கல்வி வளர்ச்சிக்கு போதிய நிதியை அரசு ஒதுக்குவதில்லை.
இதனால் தான் நிறைய மாணவர்கள் உயர் கல்வி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், உயர் கல்வியில், கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தான் நல்ல மாணவர்களை உருவாக்க முடியாமல் போகிறது.
இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கு மலரை வி.ஐ.டி., பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் வெளியிட்டார். கருத்தரங்கில் போர்ச்சுகல், பாரீஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்திருந்த அறிவியல் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.