>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 28 அக்டோபர், 2016

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணிக்கான மாதிரி வினா-விடை - 38: ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் அறிவோம் !!

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. இவைத்தவிர மேலும் சில எழுத்துக்களும் தரப்பட்டுள்ளன. தெரிந்து தெளிவு பெறுங்கள்.
ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர்.
உதாரணமாக தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ் மாதங்களில் வரும் மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும்.

இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதே ஒரேழுத்து ஒரு மொழியாகும்.
ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள்
அ - சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ - பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
இ - சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
ஈ - பறக்கும் ஈ, தா, குகை, தேனீ, கொடு.
உ - சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்
ஊ - இறைச்சி, உணவு, ஊன், தசை
எ - வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ - அம்பு, உயர்ச்சிமிகுதி
ஐ - அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை, ஐந்து, வியப்பு
ஒ - மதகு, (நீர் தாங்கும் பலகை), வினா.
ஔ - பூமி, ஆனந்தம்
க - வியங்கோள் விகுதி
கா - காத்தல், சோலை
கி - இரைச்சல் ஒலி
கு - குவளயம்
கூ - பூமி, கூவுதல், உலகம்
கை - உறுப்பு, கரம்
கோ - அரசன், தந்தை, இறைவன்
கௌ - கொள்ளு, தீங்கு
சா - இறத்தல், சாக்காடு, மரணம், பேய், சாதல்
சீ - லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல், திருமகள்
சு - விரட்டுதல், சுகம், மங்கலம்
சே - காலை, எருது, அழிஞ்சில் மரம்
சை - அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
சோ - மதில், அரண்
ஞா - பொருத்து, கட்டு
தா - கொடு, கேட்பது
தீ - நெருப்பு , தீமை
து - உண் கெடு, பிரிவு, உணவு, பறவை இறகு
தூ - வெண்மை, தூய்மை
தே - கடவுள், நாயகன், தெய்வம்
தை - தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
நா - நான், நாக்கு
நி - இன்பம், அதிகம், விருப்பம்
நீ - முன்னிலை ஒருமை, நீக்குதல்
நூ - யானை, ஆபரணம், அணி
நே - அன்பு, அருள், நேயம்
நை - வருந்து, நைதல்
நோ - துன்பப்படுதல், நோவு, வருத்தம்
நௌ - மரக்கலம்
ப - நூறு
பா - பாட்டு, கவிதை, நிழல், அழகு
பூ - மலர்
பே - மேகம், நுரை, அழகு, அச்சம்
பை - கைப்பை, பாம்புப் படம், பசுமை, உறை
போ - செல், ஏவல்
ம - சந்திரன், எமன்
மா - பெரிய, சிறந்த, உயர்ந்த, மாமரம்
மீ - மேலே , உயர்ச்சி, உச்சி, ஆகாயம், உயரம்
மூ - மூப்பு, முதுமை, மூன்று
மே - மேல், மேன்மை
மை - கண்மை (கருமை), அஞ்சனம், இருள்
மோ - மோதல், முகர்தல்
ய - தமிழ் எழுத்து என்பதின் வடிவம்
யா - ஒரு வகை மரம், யாவை, இல்லை, அகலம்
வ - நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்
வா - வருக, ஏவல், அழைத்தல்
வி - அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ - மலர் , அழிவு, பறவை
வே - வேம்பு, உளவு
வை - வைக்கவும், கூர்மை, வைக்கோல், வைதல், வைத்தல்
வௌ - வவ்வுதல், கௌவுதல், கொள்ளை அடித்தல்
நொ - நொண்டி, துன்பம்
ள - தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று - எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்