தேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.
தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, நவ., 1 முதல் பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்க, தேசிய அளவில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை, நவ., 1 முதல், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை, நவ., 1 முதல், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தேர்வுத்துறையின், http://www.tngdc.gov.in என்ற இணையதளத்தில், தலைமை ஆசிரியர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்கள், கடந்த ஆண்டு வினாத்தாள்களை, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்' என,தெரிவிக்கப்பட்டு உள்ளது.