மகிழ்ச்சியாக வாழ கற்ற கல்வியை சரியாக பயன்படுத்த அறிவுரை!
மகிழ்ச்சியாக வாழ, கற்ற கல்வியை சரியாக பயன்படுத்த வேண்டும், என, பட்டமளிப்பு விழாவில், திருவள்ளுவர் பல்கலைகழக பதிவாளர் அசோகன் பேசினார்.
வேலூர் ஊரிசு கல்லூரியில், 32 வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் எழில் கிறிஸ்து தாஸ் தலைமை வகித்தார். திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் அசோகன், 930 பேருக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:
வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால், அது பூந்தோட்டமாகவும், மறைந்து போனால் போராட்டமாகவும் மாறி விடும். நாட்டில் அனைத்து வளங்கள் இருந்தும், அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது இல்லை.
நம்மில் பலர், கற்ற கல்வியை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில்லை. மகிழ்ச்சியாக வாழ, கற்ற கல்வியை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள திறமையை கண்டறிந்து மேம்படுத்திக் கொண்டால், சாதனையாளராக மாற முடிவும். இவ்வாறு அவர் பேசினார். கல்லூரி துணை முதல்வர்கள் ஜெய செல்வதாஸ், குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.