பல்கலைகளில், செனட் மற்றும் கல்விக்குழுவில், எம்.எல்.ஏ.,க்கள் !
சென்னை பல்கலை உட்பட தமிழக பல்கலைகளில், செனட் மற்றும் கல்விக்குழுவில், எம்.எல்.ஏ.,க்கள் நியமனம் செய்வது தாமதமாகி உள்ளது.
சென்னை பல்கலை மற்றும் மதுரை காமராஜர் பல்கலையில், செனட் சபையிலும், மற்ற பல்கலைகளில், அகாடமிக் கவுன்சில் என்ற கல்விக்குழுவிலும், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், பிரதிநிதிகளாக நியமனம் செய்யப்படுவர்.

அவர்கள், செனட், கல்விக்குழு கூட்டங்களில், பல்கலைகளின் பிரச்னை, கல்வி முன்னேற்றம் மற்றும் புதிய படிப்புகள் தேவை குறித்தும் பேசுவர். ஆனால், சட்டசபை தேர்தல் முடிந்து, புதிய அரசு அமைந்து, ஐந்து மாதங்களை தாண்டி விட்டது.
பல்கலைகளின் செனட் பிரதிநிதிகளாக, எம்.எல்.ஏ.,க்கள் நியமிக்கவில்லை. சென்னை பல்கலையில் மட்டும், ஆளுங்கட்சி சார்பில், நான்கு; எதிர்க்கட்சி சார்பில், இரண்டு எம்.எல்.ஏ.,க்களை நியமிக்க முடியும். இதற்கான பரிந்துரை கடிதத்தை, சட்டசபை சபாநாயகரிடம் இருந்து, பல்கலைகள் எதிர்பார்த்து உள்ளன.