தருமபுரி அரசுப்பள்ளியில் பெற்றோருக்கு குரல் குறுஞ்செய்தி அனுப்பும் புதிய திட்டம்
தருமபுரி மாவட்டத்தில் முதல்முறையாக இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் பெற்றோரின் கைப்பேசிக்க குரல் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி முதன்முறையாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி யில் பெற்றோர்களின் கைப்பேசிக்கு குரல் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பும் வசதியை தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறியதாவது,தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதன் முறையாக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம் மாணவ, மாண வி க ளின் நட வ டிக் கை கள், பள்ளி விடு முறை நாட் கள், மாணவர்கள் வருகை, பெற்றோர் ஆசிரியர் கூட் டங்கள் ஆகியன குறித்து பெற்றோர்களுக்கு பதிவு செய்யப் பட்ட குரல் மூலம் தக வல் அனுப் பப் ப டும்.
இதன் மூலம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்படுகிறது. இந்த நடை முறை படிப்படியாக மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன், நேர்முக உத வியாளர் கோவிந்தசாமி, இலக்கியம்பட்டிஅரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசியர் பொன்முடி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள் ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.