2020 ல் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருகிறது 5ஜி சேவை!!
5வது தலைமுறை வயர்லெஸ் தொலைத் தொடர்பு சேவையான 5ஜி, அதிவேக பயன்பாடு மட்டுமின்றி லட்சக்கணக்கானவர்களின் இணையத்துடன் இணைக்கப்பட்ட டிரைவர் இல்லாத கார்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றையும் இணைக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என
கூறப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் தொலைத் தொடர்பு மற்றும் இணையதள தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கத்துடன் இந்த 5ஜி சேவை தயாராகி வருவதாக ைதராபாத் ஐஐடி.,யின் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் கிரன் குசி தெரிவித்துள்ளார். அரசுடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ, டாடா டெலிசர்விசஸ் உள்ளிட்ட சில தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் இணைந்து இந்த சேவையை வழங்க உள்ளன. இந்த அதிநவீன சேவையை அறிமுகம் செய்வதன் மூலம் இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.