CPS திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் 80 C ல் ரூ:1,50,000 த்திற்கு மேல்கூடுதலாக சேமிப்பு இருப்பின் தங்கள் CPS தொகையில் ரூ50000 வரை 80CCD (1B)ல் கழித்துக்கொள்ளலாம் என பல்வேறு மாவட்டங்களில் வருமான வரி துறையும், கருவூல கணக்குத்த்துறையும் இணைந்து நடத்திய கூட்டத்தில் அறிவுறித்தயுள்ளது.
வருமான வரி படிவத்தில், Under chapter VI A ல் ரூ:150,000 வரை கழிக்கலாம். CPS திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஒரு சலுகை உண்டு. ரூ:1,50,000 த்திற்கு மேல்கூடுதலாக சேமிப்பு இருப்பின், படிவத்தில் காட்டியவாறு chapter VI ல் 150000, போக மீதமுள்ள தொகையினை ரூ50000 வரை 80CCD (1B)ல் கழித்துக்கொள்ளலாம். (அவர் CPS ல் சுமார் 82000 காட்டியிருந்தால் 32000+50000 என பிரித்துக்கொள்ளவும் கொள்ளவும்,) Tax Payable for 2016-2017 ல் ரூபாய் 5 லட்சம் அல்லது அதைவிட குறைவாக வருபவர்களுக்கு பிரிவு 87A ன்படி ரூ:5000 கழித்துக்கொள்ளலாம். ரூபாய் 250000-வரி இல்லை, ரூபாய் 250001முதல் 500000 வரை 10% வரி, ரூபாய் 500001 முதல் 1000000 வரை 20% வரி செலுத்த வேண்டும்.
கூடுதலாக ரூபாய் 50000 வரை 80CCD(1B)- ல் கழித்துக் கொள்ளலாம் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் ரூபாய் 150000 மேல் சேமிப்பு உள்ளவர்கள் கூடுதலாக ரூபாய் 50000 வரை 80CCD(1B)- ல் கழித்துக் கொள்ளலாம் என மண்டல இணை இயக்குநர், கருவூல கணக்குத் துறை அலுவலர் தெளிவுரை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருச்சி மாவட்டம் கிளைக்கு வழங்கியுள்ளார். அவர்களுக்கு அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தகவல்: உதுமான் மாவட்டச் செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருச்சி மாவட்டம் 9790328342