அரசு பேருந்தில் பயணிக்க சீட் பெல்ட் கட்டாயம் : விபத்தை தவிர்க்க கர்நாடக அரசு புதிய திட்டம்
அரசு பேருந்துகளில் பயணிகள் சீட் பெல்ட் அணிவதை கர்நாடகா அரசு கட்டாயமாக்கியுள்ளது. சாலை விபத்துகளை தவிர்பது குறித்து அம்மாநில போக்குவரத்து உயரதிகாரிகள் பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தினர்.
அப்போது நெடுஞ்சாலைகளில் ஏற்படும் திடீர் பிரச்சனைகளின் போது ஓட்டுநர் பிரேக் பிடிக்கும் போது கீழே விழுந்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் கர்நாடகத்தில் விபத்துக்களை குறைக்க பேருந்துகளில் சீட் பெல்ட் கட்டாயமாக்க போக்குவரத்து அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதனையடுத்து கேஎஸ்ஆர்டிசி எனப்படும் கர்நாடக போக்குவரத்து துறையால் இயக்கப்படும் பேருந்துகளில் பயணம் செய்வோர் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் சராசரியாக ஆண்டு தோறும் பேருந்துகளால் ஏற்படும் சாலை விபத்துகளில் 270 பேர் உயிரிழப்பதாக புள்ள விவரங்கள் தெரிவித்துள்ளன.