நீட் தேர்வுப் பயிற்சிக்குப் புதிய செயலி!...
LETS ACT
சென்னையில் நீட் தேர்வுப் பயிற்சிக்காகத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி மையங்களை அரசு நடத்திவருகிறது. அது போன்று, தனியார் பயிற்சி மையங்களும் செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில், தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர் ராம் பிரகாஷ், காணொளி மூலம் நீட் தேர்வுப் பயிற்சிக்கான புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளார். அரசு நீட் பயிற்சி வகுப்புகளை நடத்திவந்தாலும், கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு சரியாகக் கிடைப்பதில்லை.
ஆனால், அனைத்துப் பகுதிகளிலும் தனியார் பயிற்சி மையங்கள் இருக்கின்றன. அங்கே சேருவதற்கான விண்ணப்பத்தை ரூ.1400 கொடுத்து வாங்க முடியாத பொருளாதார நெருக்கடியில்தான் அதிக மாணவர்கள் உள்ளனர்.
அதனால், அனைத்து மாணவர்களும் எளிதில் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற LETS ACT என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறோம்; அது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறினார் ராம் பிரகாஷ்