பள்ளி பாதுகாப்பிற்கான ஆய்வு-உயர்நீதிமன்றம் உத்தரவு அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி ஏப்ரல் 9ஆம் தேதி அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது
பள்ளி கட்டிடங்கள் விதிமுறைப்படி கட்டப்பட்டுள்ளனவா பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப் பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கும்பகோணத்தில் நடந்த தீ விபத்திற்கு பிறகு அனைத்து பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்காகப் பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுகளையும், தேசியக் கட்டட விதிகளையும் செயல்படுத்த உத்தரவிடக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்துப் பள்ளிகளும் தேசியக் கட்டட விதிகளின்படி கட்டப்பட்டுள்ளனவா குழந்தைகள் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்ய அனைத்து மாவட்டங்களிலும் முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் குழு அமைக்கப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டனர். இந்தக் குழுவினர் அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி ஏப்ரல் 9ஆம் தேதி அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது