தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவிப்பு
டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த குடியரசு தின விழாவையொட்டி விருதுக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று டெல்லியில் ஜனாதிபதி மாளிகை ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி வருகிறார். இந்த விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
1. இளையராஜா
2. விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்
3. நானம்மாள்
4. ராஜகோபால் வாசுதேவன்
5. ராமச்சந்திரன் நாகசாமி
6. ரோமுலஸ் விடாகர்
இளையராஜாவுக்கு பத்மபூஷண் விருதும், மதுரையை சேர்ந்த ராஜகோபால் வாசுதேவனுக்கும், நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கும், கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் நானம்மாளுக்கும், சென்னை பாம்பு பண்ணையை நிறுவிய ரோமுலஸ் விடாகருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகளும் தொல்லியல் ஆய்வாளர் ராமசந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டன.