கட்டுரைப்போட்டியில் பெற்ற பரிசுத்தொகையை பள்ளி வளர்ச்சி நிதிக்கு அளித்த ஏழாம் வகுப்பு மாணவி நிவேதா
நிவேதா...
எங்கள் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி.கூரை வேய்ந்த வீடு.பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லை.ஆனால் எதையும் தெளிவான பார்வையோடு அணுகும் திறமையான பெண்...படிப்பில் படு சுட்டி.. கணக்கு பாடத்தில் மிக மிக கெட்டி..
எங்கள் ஒன்றியத்தில் சென்ற வாரம் நடைபெற்ற RTE தொடர்பான போட்டிகளில் உயர் தொடக்கப்பள்ளி நிலையில் *நிவேதாவை* கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ள தயார் செய்திருந்தோம்...
போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், விளையாட்டாய் "நிவேதா, நீயோ ஏழாம் வகுப்பு தான் படிக்கிறாய்..எட்டாம் வகுப்பு மாணவர்களுடன் போட்டியிட வேண்டியிருக்கும்..முதல் பரிசுவாங்குவது சற்று கடினம்தான்..குறைந்தது மூன்றாவது பரிசாவது பெற முயற்சி செய்வோம் நிவேதா" என்றேன்..
அதற்கு சிறிதும் தாமதிக்காதவளாய் "சார் ,நாம முதல் பரிசுதான் வாங்குறோம் சார் " என்று உறுதியாக சொன்னாள்...
அவள் தன்னம்பிக்கைக்கு தகுந்தார்போல் போட்டியில் இரண்டாம் பரிசை வென்று பரிசுத் தொகையாக ₹1300 பெற்றாள்.
அதுக்கப்புறம்தான் நடந்ததுதான் ஹைலைட்டு...வங்கிக்கு சென்று பரிசுத்தொகைக்கான
காசோலையை பணமாக மாற்றிய கையோடு நேராக பெற்றோரோடு பள்ளிக்கு வந்தவள் தான் பெற்ற பரிசுத் தொகையை எங்கள் பள்ளியின் த ஆ யிடம் வழங்கி இதை பள்ளியின் வளர்ச்சிக்கு தன் பங்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி எங்களை வியப்புக்குள்ளாக்கினாள்..
பெற்றோரிடம் என்னங்க இதெல்லாம் என்று விசாரித்த போது,"அவள் பெரியவளாகி வேலைக்கு சென்று சம்பாதிக்க துவங்கியதும் பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பாள்....அதற்கான வாய்ப்பு இப்போதே கிடைத்துவிட்டது.என் மகள் விருப்பபடியே பரிசுத் தொகையை பள்ளிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என பெற்றோரும் தலைமையாசிரியரிடம் வற்புறுத்த துவங்கி விட்டனர்..
தலைமையாசிரியருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.., அவர்களிடம் எவ்வளவு எடுத்துகூறியும் நிவேதாவும் அவள் பெற்றோரும் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளாமல் உறுதியாக நிற்கின்றனர்.
இந்த பெருமித மனநிலையில் இருந்து மீளாத தலைமை ஆசிரியை அவர்கள் காலை இறைவணக்க கூட்டத்தில் *நிவேதாவின்* செயலை எடுத்துக்கூறி அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் பாராட்டினார்..
அவளின் உழைப்பால் கிடைத்த பரிசு அவளுக்கு மட்டுமே உரியது என்று நாங்கள் உறுதியாக இருந்தாலும் அவர்களின் உறுதிக்கு முன் என்ன செய்வதென்று அறியாத நிலையில், அருமையான மாணவியை வளர்த்தெடுத்த பெருமிதத்தோடு
*ஊ ஒ ந நி பள்ளி,வடசிறுவளூர்,ஒலக்கூர் ஒன்றியம்,விழுப்புரம் மாவட்டம்.*