ரூ. 20 க்கு ஒரு ஜி.பி டேட்டா - செக்க போடு போடும் வை பை டப்பா...!
குறைந்த கட்டணத்தில், தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வரும், ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டி போடும் வகையில் அதிரடி ஆஃபரை இறக்கியுள்ளது பெங்களூரைச் சேர்ந்த ஒரு, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம்.
‘வை பை டப்பா’ எனும் நிறுவனத்தை சுபீந்த் சர்மா, கரம் லக் ஷம் ஆகியோர் துவங்கியுள்ளனர். இந்நிறுவனம், 2, 10 மற்றும் 20 ரூபாயில், அதிவேக இன்டர்நெட் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.
முதற்கட்டமாக இந்த சேவையை கர்நாடக மாநிலம், பெங்களூரில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது ரூ. 2 க்கு 100 எம்.பி. ரூ. 10 க்கு 500 எம்.பி. ரூ. 20 க்கு 1 ஜி.பி. வீதம் டேட்டா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இவற்றை ஒரு நாள் மட்டுமே வேலிடிட்டி.
தேநீர் விடுதி மற்றும் பலதரப்பட்ட கடைகளில், ‘வை பை டப்பா’ டோக்கன் விற்கப்படும் எனவும் இதை வாங்கி மொபைல் எண்ணை பதிவு செய்து ஓ.டி.பி. நெம்பரை பதிவுசெய்து டேட்டாவை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு முழுவதும், 350 வழித்தடங்களில், ‘வை பை டப்பா’ பயன்பாட்டிற்கான, ஒருங்கிணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.